பதஞ்சலி நிறுவனர் ராம் தேவின் சர்ச்சைக்குரிய மருந்து கொரோனில் ஒரு லட்சம் கிட்டுகள் இலவசம்: அரியானா அரசு அறிவிப்பு
பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவின் சர்ச்சைக்குரிய மருந்தான கொரோனில்-ஐ, ஒரு லட்சம் கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக வழங்க உள்ளதாக அரியானா அரசு அறிவித்துள்ளது.
இதற்கான செலவில் பாதியை அரியானா அரசும், மிச்சத்தை பதஞ்சலி நிறுவனமும் ஏற்றுக் கொள்ளும் என மாநில அமைச்சர் அனில் விஜ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். கொரோனில் மருந்தை மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் முன்னிலையில் ராம் தேவ் வெளியிட்ட போது அதன் உண்மைத் தன்மை குறித்து அலோபதி மருத்துவர்கள் பல கேள்விகளை எழுப்பினர்.
ஆனால் தமது மருந்துக்கு பார்மசூட்டிகல் பொருளுக்கான சான்று மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் சிறந்த தயாரிப்பு நடைமுறைகளுக்கான சான்றிதழ் இருப்பதாக ராம் தேவ் கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments