மகாராஷ்டிராவில் 22 ஆயிரமாகக் குறைந்தது கொரோனா பாதிப்பு
கொரோனா தொற்று குறைந்து வருவதால் வரும் ஒன்றாம் தேதி முதல் ஊரடங்கை படிப்படியாக விலக்கிக் கொள்ள மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அப்போது அத்தியாசியம் இல்லாத கடைகளும் நேரக்கட்டுப்பாட்டுடன் செயல்பட அனுமதி வழங்கப்படும் என சொல்லப்படுகிறது. அரசு அலுலகங்களில் கூடுதல் ஊழியர்கள் பணிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் புறநகர் மின்சார ரயில்கள் மேலும் சில வாரங்கள் கழித்தே பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும் என கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவில் 69 நாட்களுக்குப் பிறகு நேற்று மிகவும் குறைந்தபட்சமாக, 22 ஆயிரத்து 122 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.கடந்த 3 வாரங்களாக மாநிலத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருவதால் ஊரடங்கை படிப்படியாக நீக்க மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது.
Comments