பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் தேடப்படும் மெகுல் சோக்சி திடீர் மாயம்

0 2129

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் மோசடியில் தேடப்பட்டு வரும் பிரபல வைர வியாபாரி மெகுல் சோக்சி ஆண்டிகுவா நாட்டில் இருந்து காணாமல் போய் விட்டதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

வங்கி மோசடி தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையும் அவரைத் தேடி வருகின்றன. இந்த நிலையில் ஆண்டிகுவா நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள உணவகத்திற்கு மெகுல் சோக்சி சென்றதாகவும், அதன் பின்னர் அவர் காணாமல் போய் விட்டதாகவும் சோக்சியின் வழக்கறிஞர் விஜய் அகர்வால் தெரிவித்துள்ளார்.

சோக்சி பயன்படுத்திய வாகனம் ஜாலி ஹார்பர் என்ற இடத்தில் இருந்ததாகக் கூறியுள்ள அவர், சோக்சியைக் காணாமல் அவரது குடும்பத்தினர் கவலையுடன் இருப்பதாகவும் விஜய் அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments