புதுச்சேரி தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் நாளை பதவியேற்பு

0 1919

புதுச்சேரி தற்காலிக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள லட்சுமி நாராயணனுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் நாளை பதவிப் பிரமாணம் செய்து வைக்கவுள்ளார்.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களையும், பாஜக 6 இடங்களையும் பிடித்து வெற்றிபெற்றதையடுத்து, என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டார்.

இந்நிலையில், கடந்த 21 ம் தேதி தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் நாளை துணை நிலை ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்கவுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் நாளை பதவியேற்க உள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments