இரும்புக் கொலைகாரனுக்கு தூக்குத்தண்டனை...! 7 லாரி ஓட்டுனர்கள் கொலைக்கு நீதி

0 13056
இரும்புக் கொலைகாரனுக்கு தூக்குத்தண்டனை...! 7 லாரி ஓட்டுனர்கள் கொலைக்கு நீதி

தமிழகம் மற்றும் வட மாநிலத்தில் இருந்து இரும்பு லோடுடன் ஆந்திராவை கடந்து செல்லும் லாரிகளை போலீஸ் வேடத்தில் மறித்து, ஓட்டுனர்கள் மற்றும் கிளீனர்கள் என மொத்தம் 7 பேரை கொன்று புதைத்து, லாரிகளை பிரித்து விற்ற கொடூர கொலைகாரன் முன்னா உள்ளிட்ட 11 பேருக்கு ஓங்கோல் நீதிமன்றம் தூக்குதண்டனை விதித்துள்ளது. மர்மமான முறையில் லாரிகளுடன் மாயமான ஓட்டுனர்களின் சாவுக்கு 13 வருடங்களுக்கு பின்னர் கிடைத்துள்ள நீதி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

தமிழகம் மற்றும் வட மாநிலத்தில் இருந்து இரும்பு லோடுடன் ஆந்திர நெடுஞ்சாலையை கடக்கின்ற லாரிகள் ஓட்டுனர் மற்றும் கிளீனருடன் மர்மமான முறையில் மாயமான சம்பவம் 2008 ஆம் ஆண்டு பரபரப்பாக பேசப்பட்டது.

ஆரம்பத்தில் சம்பந்தப்பட்ட ஓட்டுனரே லாரியை கடத்திச்சென்று டன் கணக்கிலான இரும்பு லோடை விற்று விட்டு தலைமறைவாகி இருக்கலாம் என்று முதலில் சாதாரணமாக கருதப்பட்ட நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் லாரிகளை மடக்கி பணம் வசூல் செய்து கொண்டிருந்த போலீஸ் வேட கொள்ளையர்களை பிடித்து விசாரித்த போது மாயமான லாரிகள் குறித்து திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.

சையது அப்துல் சமது என்கிற முன்னா என்பவனது தலைமையிலான 18 பேர் கொண்ட கொடூர கொலைக்கார கும்பல் இரவு நேரங்களில் போலீஸ் போல வேடமணிந்து லாரிகளை மடக்கி விசாரிப்பது போல நடித்து லாரி ஓட்டுனர்களையும் கிளீனர்களையும் கயிற்றால் இறுக்கி கொலை செய்து இரும்பு லோடுடன் லாரிகளை சீதாராமபுரத்தில் உள்ள தங்களது குடோனுக்கு கொண்டு சென்று இரும்பு ராடுகளையும், லாரியை பகுதி பகுதியாக கழட்டி விற்பதை வாடிக்கையாக செய்து வந்தது தெரியவந்தது.

அந்தவகையில் 2008 ஆம் ஆண்டில் மட்டும் தமிழகத்தை சேர்ந்த லாரி ஓட்டுனர் ராமசேகர், கிளீனர் பெருமாள் சுப்பிரமணி, ஆகியோரை கொலை செய்து மடிபாடு அருகே புதைத்துள்ளனர். கல்பாக்கத்திற்கு இரும்பு லோடுடன் வந்த மேற்குவங்க மாநிலம் துர்க்காபூரை சேர்ந்த ஓட்டுனரையும் கிளீனரையும் கொன்று புதைத்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இருந்து காஞ்சிபுரத்திற்கு இரும்பு லோடுடன் வந்த ஓட்டுனர் பூஷன்யதவ் கிளீனர் சந்தன்குமார் ஆகியோரை தீர்த்துக்கட்டி சடலங்களை மன்னேரி குட்டையில் புதைத்துள்ளதை கண்டுபிடித்தனர்.

அதே போல கும்பிடிப்பூண்டியில் இருந்து காக்கினாடாவுக்கு இரும்பு லோடு ஏற்றிச்சென்ற லாரியை மடக்கி ஓட்டுனர் ஷாம் பாபு, வினோத்குமார் ஆகியோரை கொன்று இனமனமல்லூர் ஏரிக்கரையில் புதைத்து லாரியை பார்ட் பார்ட்டாக பிரித்து விற்றுள்ளது விசாரணையில் தெரியவந்தது. இத்தனை கொலைகளையும் செய்து விட்டு வெளி நாட்டுக்கு தப்பிச்செல்லும் திட்டத்துடன் கர்நாடகத்தை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏவின் பண்ணை வீட்டில் பதுங்கி இருந்த போலீஸ் வேட கொள்ளையன் முன்னாவை ஓங்கோல் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மொத்தம் 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த கொடூர லாரி கடத்தல் கொலைகார கும்பல் மீது இதே போல கடப்பா, நல்கொண்டா,தெனாலி, விஜயவாடா, பெங்களூர் மற்றும் பிரகாசம் மாவட்டங்களிலும் ஏராளமான கொலை கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை ஓங்கோல் நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில் கொடூர கொலைகாரண் முன்னா உள்ளிட்ட 11 பேருக்கு துக்குதண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments