கறுப்பு-வெள்ளை பூஞ்சையை தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் மஞ்சள் பூஞ்சையும் கண்டுபுடிப்பு..! பூஞ்சைகளில் மிகவும் ஆபத்தானது, மஞ்சள் பூஞ்சை என மருத்துவர்கள் தகவல்
கறுப்பு, வெள்ளை பூஞ்சை நோய் பீதியை அதிகரித்துவரும் நிலையில், உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் முதலாவது மஞ்சள் பூஞ்சை நோய் அடையாளம் காணப்பட்டுள்ளது.
கறுப்பு மற்றும் வெள்ளை பூஞ்சையை விட இந்த மஞ்சள் பூஞ்சை மிகவும் அபாயகரமானது என கூறப்படுகிறது. இந்த பூஞ்சை தாக்கினால் பசியின்மை, எடை குறைதல், அசதி உள்ளிட்ட அறிகுறிகள் காணப்படும். மஞ்சள் பூஞ்சை பாதிப்பு உடலின் உள்பாகங்களில் மட்டுமே முதலில் இருக்கும் என்பதால் இது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது மிகவும் அத்தியாவசியமாகும்.
இந்த பூஞ்சைக்கும் Amphotericin B ஊசி மட்டுமே மருந்தாக உள்ளது. சுத்தமின்மை காரணமாகவே மஞ்சள் பூஞ்சை பரவுவதாக கூறப்படுகிறது. எனவே நம்மை சுற்றியும், வசிப்பிடத்தை சுற்றியும் சுத்தத்தை பேணுவதுடன், பழைய உணவுகள் மற்றும் கழிவுகளை விரைந்து அகற்றினால் பூஞ்சை உருவாவதை தடுக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments