அரசுக்கு எதிராக செயல்பட்ட பத்திரிக்கையாளரை பிடிக்க போர் விமானத்தை அனுப்பி கைது செய்த பெலராசின் நடவடிக்கைக்கு உலக நாடுகள் கண்டனம்
அரசுக்கு எதிராக செயல்பட்ட 26 வயதான பத்திரிகையாளர் ரோமன் புரோட்டாசெவிச் என்பவரை அவர் பயணம் செய்த விமானத்தை ராணுவ விமானம் மூலம் இடைமறித்து பெலாரஸ் அரசு கைது செய்த விவகாரம் உலக நாடுகளிடம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
பெலாரஸ் அரசுக்கு அஞ்சி போலந்தில் ரோமன் புரோட்டாசெவிச் அடைக்கலம் புகுந்திருந்தார். இந்த நிலையில், அவர், ரையான்எயர் விமானத்தில் ஏதன்சில் இருந்து வில்நியசுக்கு சென்று கொண்டிருந்ததை அறிந்த பெலாரஸ் அரசு, இந்த விமானத்தை ராணுவ விமானம் இடைமறித்து தலைநகர் மின்ஸ்க்-கிற்கு கொண்டு வந்து அவரை கைது செய்துள்ளது.
பெலாரஸ் அரசின் இந்த நடவடிக்கையால் அந்த விமானத்தில் இருந்த இதர பயணிகள் பெரும் அச்சத்திற்கு ஆளாகினர். இதற்கான பின்விளைவுகளை பெலாரஸ் சந்திக்கும் என ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வான் டெர் லியான் டுவிட் செய்துள்ளார்.
Comments