விதியை மீறி வாங்க ஆம்புலன்ஸில் ஏறி போங்க..! பட்டுபுடவை தம்பதி பாடம் புகட்டிய போலீஸ்

0 39210
ஊரடங்கை மீறி திருமண விழாவை சிறப்பித்துவிட்டு காரில் வந்தவர்கள், வாகன சோதனையின் போது, மருத்துவமனைக்கு செல்வதாக நடித்த நிலையில் உண்மையிலேயே காரில் இருந்த தம்பதியரை ஆம்புலன்ஸில் ஏற்றி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்

ஊரடங்கை மீறி திருமண விழாவை சிறப்பித்துவிட்டு காரில் வந்தவர்கள், வாகன சோதனையின் போது, மருத்துவமனைக்கு செல்வதாக நடித்த நிலையில் உண்மையிலேயே காரில் இருந்த தம்பதியரை ஆம்புலன்ஸில் ஏற்றி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.

கடலூர் மாவட்டம் திரிபாதிரிபுலியூர் சீமாட்டி சிக்னல் சோதனை சாவடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவ் மேற்பார்வையில் துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி தலைமையில் போலீசார் ஊடங்கை மீறி இயக்கப்படும் வாகனங்களை நிறுத்தி தீவிர வாகன் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சிதம்பரத்தில் இருந்து கடலூர் நோக்கிச்சென்ற காரில் 5 பேர் பயணித்தனர். அந்தகாரை நிறுத்தி விசாரித்த போது பட்டுச்சேலை அணிந்து இருந்த பெண் ஒருவருக்கு உடல் நிலை சரியில்லை என்றும் அவரை சிகிச்சைக்காக தவளக்குப்பத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்செல்வதாக கூறினர்.

கார் ஓட்டுனரை தனியாக அழைத்து விசாரித்த போது சிதம்பரத்தில் நடந்த திருமணவிழாவுக்கு சென்றுவிட்டு தவளக்குப்பத்தில் உள்ள வீட்டுக்கு செல்லும் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. ஊரடங்கை மீறி வெளியில் வந்து விட்டு மருத்துவசேவைக்காக செல்வது போல நாடகமாடிய தம்பதிக்கு பாடம் புகட்ட எண்ணிய காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவ், உடனடியாக அந்தபகுதிக்கு ஆம்புலன்ஸ் ஒன்றை வரவழைத்தார்.

உடல் நிலை சரியில்லை என்று நடித்த பட்டுச்சேலை அணிந்த பெண்ணையும் அவரது கணவரையும் அந்த ஆம்புலன்சில் ஏற்றி தவளகுப்பம் தனியார் மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தார்.

இதனை சற்றும் எதிர்பாராத மற்ற 3 பேரையும் நடு ரோட்டில் இறங்கச்சொல்லி அவர்கள் வந்தகாரை பறிமுதல் செய்ய அதிரடியாக உத்தரவிட்டார்.

உடல் நிலை சரியில்லை என்று நடித்து வாண்டடாக பொய் சொன்னதால் ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட தம்பதியர் தனியார் மருத்துவமனைக்கு அருகில் சென்றதும் தாங்கள் தெரியாமல் கூறிவிட்டோம் என்று கையெடுத்து கும்பிட்டு கதற தொடங்கியுள்ளனர்.

தங்களுக்கு உடலுக்கு ஒன்றும் இல்லை, இனி வீட்டை விட்டு அனாவசியமாக வெளியே வரமாட்டோம் மன்னித்து விடுங்கள் என்று கூறி தவளக்குப்பம் தனியார் மருத்துவமனைக்கு வெளியே இறங்கி விட்டால் போதும் என்று கால் நடையாகவே வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகின்றது.

திருமணம் வருடத்தின் எந்த நாள் வேண்டுமானாலும் நடத்தப்படலாம், மணமக்களை எப்போது வேண்டுமானாலும் வீடுதேடிச்சென்று வாழ்த்திவரலாம் அதனை உணராமல் கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு நேரத்தில் திருமண விழாவை சிறப்பிக்க சென்றுவிட்டு, உடல் நலக்கோளாறு என்று நாடகமாடினால் என்ன மாதிரியான போலீஸ் நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments