ஒரு நிமிடத்தில் முடிவு தெரியும் கொரோனா சுவாச சோதனை முறைக்கு சிங்கப்பூர் அரசு ஒப்புதல்

0 2904
ஒரு நிமிடத்தில் முடிவு தெரியும் கொரோனா சுவாச சோதனை முறைக்கு சிங்கப்பூர் அரசு ஒப்புதல்

கொரோனா தொற்று உள்ளதா என்பதை ஒரு நிமிடத்திற்குள் தெரிந்து கொள்ளக்கூடிய சுவாச சோதனை முறைக்கு சிங்கப்பூர் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் மற்றும் Breathonix என்ற நிறுவனமும் சேர்ந்து இதை கண்டுபிடித்துள்ளன. வழக்கமாக ஓட்டுநர்களிடம் நடத்தப்படும் போதை சுவாச சோதனை போல் இது உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால் சுவாசம் சேகரிக்கப்பட்டதும் கருவியில் உள்ள மென்பொருள் ஆனது அதில் கொரோனா உள்ளதா என்பதை கண்டுபிடிக்கும். கொரோனா இருப்பது தெரியவந்தால் அடுத்தப்படியாக RT PCR நடத்தி அது உறுதி செயப்படும்.

முதலில் மலேசியா எல்லையில் இந்த சோதனை நடத்தப்படும் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments