வங்கக்கடலில் உருவாகியுள்ள யாஸ் புயல் காரணமாக தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும்
வங்கக்கடலில் உருவாகியுள்ள யாஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். யாஸ் புயல் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மற்றும் குமரி மாவட்டத்தில் மட்டும் மிதமான மழை பெய்யக்கூடும். 26-ந் தேதி வட தமிழகத்தில் தரைக்காற்று பலமாகவும் இடைஇடையே சூறைக்காற்றாகவும் வீசக்கூடும்.
சென்னையில் இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தமிழக, ஆந்திர கடலோரம் மன்னார் வளைகுடா, வங்கக்கடல், ஒடிஷா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளுக்கு 4 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Comments