முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சைக்குக் கட்டணம் நிர்ணயம்
முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் கொரோனா பாதிப்புக்குத் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்குக் கட்டணத்தை நிர்ணயித்துத் தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
தீவிரமில்லா, ஆக்சிஜன் வசதியில்லா சிகிச்சைக்கு ஒரு நாளைக்கு ஐயாயிரம் ரூபாயும், ஆக்சிஜன் உதவியுடன் கூடிய சிகிச்சைக்கு ஒரு நாளைக்கு 15 ஆயிரம் ரூபாயும் கட்டணமாகும்.
வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய தீவிரச் சிகிச்சைக்கு ஒரு நாளைக்கு 35 ஆயிரம் ரூபாயும், சி பேப் எனப்படும் முறையில் ஆக்சிஜன் செலுத்தும் தீவிரச் சிகிச்சைப் பிரிவுக்கு 30 ஆயிரம் ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவில் இருந்து மீள்பவர்களுக்குத் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சைக்கு 25 ஆயிரம் ரூபாய் கட்டணமாகும்.
முதல்வர் காப்பீடு திட்டத்தில் உள்ளோருக்கு தனியார் மருத்துவமனை கட்டணத்தை அரசே செலுத்திவிடும்அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இல்லாதவர்களுக்குத் தீவிரமில்லாத கொரோனா சிகிச்சைக்கு A1, A2 உயர்தர மருத்துவமனைகளில் 7500 ரூபாயும் மற்ற மருத்துவமனைகளில் 5000 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Comments