தரமற்ற மருத்துவ ஆக்சிஜன் தான் கறுப்பு பூஞ்சை பரவ காரணமா?
சுகாதாரமற்ற முறையில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்படுவதே கறுப்பு பூஞ்சை தொற்று அதிகரிக்க காரணமா என ஆராயுமாறு, மருத்துவத் துறையினருக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரானா காலகட்டத்திற்கு முன்னர், வழக்கமாக நாடு முழுவதும் சராசரியாக ஓராண்டில் 100 பேருக்கு மட்டுமே, இந்த தொற்று ஏற்பட்டு வந்தது. ஆனால் கர்நாடகாவில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் 700 பேருக்கு கறுப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சுகாதாரமற்ற நீரில் உற்பத்தி செய்யப்படும் மருத்துவ ஆக்சிஜன், சுத்தம் செய்யப்படாத கருவிகள் வாயிலாக கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படுவது இதற்கு காரணமாக இருக்கலாம் என, பெங்களூரு மணிப்பால் மருத்துவமனை சிறப்பு மருத்துவர் சம்பத் சந்திர பிரசாத் ராவ் அளித்த அறிக்கையின் அடிப்படையில், கர்நாடக அரசு இந்த ஆய்வுக்கு உத்தரவிட்டுள்ளது.
Comments