கொரோனா வைரஸ் ஊகான் ஆய்வகத்தில் இருந்து பரவியதா? அமெரிக்க உளவுத்துறையின் புதிய தகவல்களால் பரபரப்பு
கொரோனா தொற்று குறித்து சீனா அறிவிப்பதற்கு பல மாதங்களுக்கு முன்னரே, அதன் ஊகான் நகர வைராலஜி ஆய்வக விஞ்ஞானிகள் மருத்துவ உதவியை நாடியதாக, அமெரிக்க உளவுத்துறை அறிக்கையை மேற்கோள் காட்டி, வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த ஆய்வகத்தில் இருந்த எத்தனை விஞ்ஞானிகள் பாதிக்கப்பட்டனர், தொற்று பரவிய நேரம் உள்ளிட்டவை குறித்து அமெரிக்க உளவுத் துறை புதிதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில், அந்த ஆய்வகத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் வெளியே பரவியதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
கொரோனா எப்படி பரவியது என உலக சுகாதார நிறுவனம் அடுத்த கட்ட விசாரணையை துவக்க உள்ள நிலையில், இந்த செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கொரோனா சீனாவில் இருந்து எப்படி பரவியது என்ற விசாரணையை அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் தீவிரப்படுத்தும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Comments