வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் யாஸ் புயலாக உருவானது: வானிலை ஆய்வு மையம்
கிழக்கு மத்திய வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் யாஸ் புயலாக உருவெடுத்துள்ளதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை ஐந்தரை மணி நிலவரப்படி கிழக்கு மத்திய வங்கக் கடலில் ஒடிசாவின் பாராதீப்புக்குத் தெற்கு தென்கிழக்கே 540 கிலோமீட்டர் புயல் நிலவியதாகக் குறிப்பிட்டுள்ளது. இது வடக்கு வடமேற்குத் திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரப் புயலாகவும், அதையடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிரப் புயலாகவும் உருவெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த அதிதீவிரப் புயல் புதன் நண்பகலில் ஒடிசாவின் பாராதீப், மேற்குவங்கத்தின் சாகர் தீவுகள் இடையே கரையைக் கடக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. புயலின் காரணமாக ஆந்திரத்தின் வடக்குக் கடலோரப் பகுதி, ஒடிசாவின் கடலோர மாவட்டங்கள், மேற்கு வங்க மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்குக் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
Comments