நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் இறங்குமுகம்

0 5804

கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 22 ஆயிரத்து 315 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பது கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இதே காலகட்டத்தில் 4 ஆயிரத்து 454 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். மூன்று லட்சத்து இரண்டு ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையில், தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை சுமார் 27 லட்சத்து 20 ஆயிரமாக உள்ளது.

நாட்டில் இதுவரை கொரோனா பாதித்து 3 லட்சத்து 3 ஆயிரத்து 720 பேர் உயிரிழந்தனர். 19 கோடியே 60 லட்சத்து 51 ஆயிரத்து 962 பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments