மகாராஷ்ட்ராவில் ஜூன் 1 முதல் ஊரடங்குகள் தளர்வு ?
மகாராஷ்ட்ராவில் ஊரடங்கு விரைவில் தளர்த்தப்படக்கூடும் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார்.
உத்தவ் தாக்கேர தலைமையிலான சிவசேனா கூட்டணி அரசு படிப்படியாக ஊரடங்கைத் தளர்த்த திட்டமிட்டு வருகிறது. மகாராஷ்ட்ராவில் உச்சத்தில் இருந்த கொரோனா தொற்றின் பாதிப்பு இப்போது குறையத் தொடங்கியுள்ளது. மே மாத இறுதியில் நிலைமையை ஆய்வு செய்து முடிவெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இதையடுத்து ஜூன் முதல் தேதியில் இருந்து மகாராஷ்ட்ராவில் தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் 5ம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு ஏப்ரல் 15க்குப் பிறகு கடுமையான ஊரடங்காக அமலில் உள்ளது.
Comments