கொரோனா தடுப்பூசியைக் கேலி பேசியவர்கள் இப்போது தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்: உ.பி முதலமைச்சர் கிண்டல்
கொரோனா தடுப்பூசி குறித்துக் கேலி பேசியவர்கள், இப்போது தடுப்பூசி போட்டுக்கொள்வதாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் அகிலேசின் சொந்த ஊரான சைபையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்த யோகி ஆதித்யநாத் செய்தியாளர்களிடம் பேசினார். தடுப்பூசி ஒத்திகையின்போது, பாஜக தடுப்பூசி என அகிலேசும், காங்கிரஸ் தலைவர்களும் கிண்டல் செய்ததைக் குறிப்பிட்ட அவர், இப்போது அனைவரும் விரைந்து சென்று தடுப்பூசி போட்டுக் கொள்வதாகத் தெரிவித்தார்.
கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளைத் தாக்கும் எனக் கூறப்படுவதால், அதைத் தடுக்கும் வகையில் பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ள பெற்றோரைக் கண்டறிந்து அவர்களுக்குத் தடுப்பூசி போடப்படும் என யோகி ஆதித்ய நாத் தெரிவித்தார்.
Comments