4 மணி நேரமாக ஆம்புலன்சில் காத்திருப்பு... ஆக்சிஜன் தீர்ந்ததால் மூச்சுத் திணறி இளைஞர் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி கிடைக்காமல் 4 மணி நேரம் ஆம்புலன்சில் காக்க வைக்கப்பட்டிருந்த நோயாளி, சிலிண்டரில் ஆக்சிஜன் தீர்ந்ததால் மூச்சுத் திணறிப் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 34 வயது இளைஞர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 5 நாட்களாகத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவரைக் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய ஆம்புலன்சில் கொண்டுசென்றனர்.
மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி படுக்கைகள் அனைத்தும் நிரம்பியிருந்ததால் அவருக்கு 4 மணி நேரமாகப் படுக்கை வசதி ஏற்படுத்திக் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இளைஞரின் உயிரைக் காக்க அவரின் உறவினர்கள் பலவாறு முயன்றும் அந்த இளைஞர் மூச்சுத் திணறிப் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆம்புலன்சில் இருந்த ஆக்சிஜன் தீர்ந்ததாலேயே அவர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
Comments