அதிகம் பணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை - போக்குவரத்துத் துறை அமைச்சர் எச்சரிக்கை

0 1824

முழு ஊரடங்கு அவசரத்தை காரணம் காட்டி ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்து உள்ளார்.

முழு ஊரடங்கு அமலாவதை அடுத்து வெளியூர் செல்லும் பயணிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில் மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையத்தில் அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பயணிகள் சிரமமின்றி சொந்த ஊர்கள் செல்ல தேவையான முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments