இந்தியாவின் கொரோனா நிலைமை, குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை - சர்வதேச நிதியம்
இந்தியாவின் கொரோனா நிலைமை, குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை என சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் மற்றும் பொருளாதார நிபுணர் ருச்சீர் அகர்வால் ஆகியோரால் இணைந்து வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், நடப்பாண்டின் முடிவில் இந்தியாவின் தடுப்பூசி பாதுகாப்பு 35 விழுக்காட்டுக்கும் குறைவாகவே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
பிரேசிலில் ஒரு மோசமான பாதிப்பைத் தொடர்ந்து, இந்தியாவில் நடந்து வரும் பேரழிவுகரமான இரண்டாவது அலை, வளரும் நாடுகளில் இன்னும் மோசமான நிலை வரக்கூடும் என்பதற்கான அறிகுறியாகும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments