கார்பன் உமிழ்வைக் குறைக்க பாலைவனத்தில் ஒரு கோடி மரங்களை நட்டு வளர்க்க சவுதி அரசு திட்டம்
கார்பன் உமிழ்வைக் குறைக்கும் வகையிலும், பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்கவும் பாலைவனத்தில் ஒரு கோடி மரங்களை நட சவுதி அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்த மாநாட்டில் பேசிய அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான், சவுதி பசுமைத் திட்டம் என்ற பெயரில் 2030ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வைத் தடுக்கும் முயற்சியில் சவுதி ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
கார்பனுக்கு மாற்றாக 50 விழுக்காடு ஆற்றலை புதுப்பிக்கத்தக்க பொருட்களிலிருந்து பெற்றால் கார்பன் உமிழ்வைக் குறைக்கலாம் என்று குறிப்பிட்டார். காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் உலகம் மேலும் வேகமெடுத்துச் செல்லவேண்டும் என்று முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.
Comments