ஊரடங்கில் தவிப்போருக்கு உதவும் வகையில் ஓர் உன்னத முயற்சி... எழுச்சியின் நன்னயம்!

0 11242

நாடு முழுவதையும் ஆட்டி படைத்துக்கொண்டிருக்கிறது கொரோனா தொற்று. மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லாமலும், ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் மக்கள் தவித்து வருகின்றனர்,. இப்படி உலகமே கொரோனாவோடு போராடிக்கொண்டிருக்கும் அதே நேரத்தில், பலர் ஊரடங்கினால் அடுத்த வேளை உணவிற்கு கூட வழியில்லாமல் போராடி வருகின்றனர். தனியார் அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் தாமாகவே முன்வந்து உணவில்லாமல் தவித்து வருவோருக்கு உணவளித்து அவர்களின் பசியை போக்கி வருகின்றனர்,.

அந்த வகையில், ’மோனிகாவின் எழுச்சி’ என்கிற தனியார் அமைப்பு 'நன்னயம்' என்கிற பெயரில் புதிய முயற்சியை கையில் எடுத்து கடந்தாண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. பசியால் வாடுபவர்களையும், அவர்களுக்கு உதவும் கரங்களையும் இணைக்கும் பாலம் தான் எழுச்சியின் 'நன்னயம்'.

எழுச்சி குழுவினர், முதலில் ஊரடங்கில் தவித்து வரும் குடும்பங்கள் குறித்தான தரவுகளை தயார் செய்து, அவர்கள் குறித்தான விவரங்களை தங்களது வெப்சைட்டில் பதிவு செய்கின்றனர். அதனுடன் அவர்களின் வங்கி கணக்கு எண் உள்ளிட்டவற்றை குறிப்பிடுகின்றனர். உதவி செய்ய விரும்புவோர், வெப்சைட் மூலம் உணவு தேவைப்படுவோரின் வங்கி கணக்கில் நேரடியாக பணத்தை செலுத்தலாம். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், உதவி தேவைப்படுவோர் தங்களுக்கு யார் உதவி செய்தார்கள் என்பதை அறிந்துகொள்ள முடியாது. காரணம் உதவி தேவைப்படுவோருக்கும் , உதவி செய்பவருக்கும் நேரடி தொடர்ப்பு இல்லை. எழுச்சி நன்னயம் வெப்சைட்டில் உள்ள வங்கி கணக்கு மட்டுமே அடையாளம். 

கடந்த முறை ஏற்பட்ட ஊரடங்கில் ஆயிர கணக்கான குடும்பங்கள் நன்னயம் வெப்சைட் மூலம் பயனடைந்துள்ளனர்,. உதவுபவர்கள் பலர், மாதக்கணக்கில் குடும்பங்களுக்கு உதவி வந்துள்ளனர்,. ஒரு சிலர், தற்போது வரை உதவி செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை கருத்தில் கொண்டு, மக்களுக்கு உதவ முன்வந்துள்ளனர், எழுச்சி நிறுவனம் . இந்த முறையும் வெப்சைட் மூலம் , ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர்,. 

Nannayam.in என்ற முகவரியில் உதவி தேவைப்படுவோர்களும், உதவி செய்ய விரும்புவோர்களும் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.  

எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல், தடுப்பு மருந்து இல்லாத உயிர்க்கொள்ளி நோயான பசிக்கு இதுப்போல தன்னார்வலர்கள் தாங்களாகவே முன்வந்து உதவுவது தேச ஆரோக்கியத்தின் உச்சக்கட்டம். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments