எவரெஸ்ட் சிகரம் ஏறச் சென்ற 200 பேருக்கு கொரோனா எனத் தகவல்

0 2148

உலகில் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்திற்கு சென்றவர்களில் 200 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து ஆஸ்திரியாவைச் சேர்ந்த மலையேற்ற வீரர் லூகாஸ் என்பவர் கூறும்போது, இமயமலையில் 17 ஆயிரம் அடி உயரத்தில் முகாமிட்டு தங்கியுள்ளவர்கள் கடுமையான இருமலால் அவதிப்படுவதாகத் தெரிவித்துள்ளார். மலையேறச் சென்றவர்கள், அவர்களுக்கு வழிகாட்டியாகச் சென்றவர்கள் என சுமார் 200 பேர் வரை பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆனால் இதற்கு நேபாள அதிகாரிகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர். அதிக உயரத்தில் இருக்கும் போது மனிதர்களுக்கு ஏற்படும் சாதாரண பாதிப்புதான் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments