கொரோனாவில் இருந்து மீண்ட கட்டுமான நிறுவன அதிபர்: மருத்துவமனையில் படுக்கை வசதியின்றி தவிப்போருக்காக 4000 படுக்கைகள் தயார் செய்து கொடுத்து உதவிக்கரம்

0 3020

கொரோனாவில் சிக்கி உயிர்பிழைத்து வந்த கட்டுமான நிறுவன அதிபர் ஒருவர், தனது நண்பர்களுடன் இணைந்து அரசின் ஒத்துழைப்புடன் இதுவரை கொரோனா சிறப்பு சிகிச்சை முகாம்களுக்காக 4,000 படுக்கைகளை தயார் செய்து கொடுத்துள்ளார்.

ஜி ஸ்கொயர் என்ற கட்டுமான நிறுவன உரிமையாளரான பாலா என்பவர் சிலவாரங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்புக்குள்ளாகி ஆக்சிஜன் உதவியுடன் மருத்துவர்களின் தீவிர சிகிச்சையின் பலனாய் உயிர்பிழைத்துள்ளார். தன்னைப் போலவே கொரோனா பாதிப்புக்குள்ளான ஏராளமான மக்கள் ஆக்ஸிஜன் வசதி படுக்கையின்றி அவதிப்படுவதை கண்கூடாக பார்த்த அவர் அரசுடன் கைகோர்த்து இந்த நிலையை மாற்ற படுக்கைகள் அமைக்க களமிறங்கியுள்ளார்.

அதன்படி சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு சிகிச்சை மையம், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை ஆகியவற்றில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய கூடுதல் படுக்கை வசதிகளை அமைத்துக் கொடுத்தார். ஆக்சிஜனை அரசு வழங்க, அதற்குத் தேவையான பைப் லைன் மற்றும் படுக்கை வசதிகளை மட்டும் பாலா, தனது நண்பர்களுடன் இணைந்து செய்யத்தொடங்கினார்.

அவருடன் மேலும் சில கட்டுமான நிறுவனங்களும் உதவிக்கரம் நீட்டியதால் அண்மையில் மதுரை தோப்பூரிலும், சேலம், கோவை திருப்பூர் என தமிழகம் முழுவதும் தற்போதுவரை 4,000 படுக்கை வசதிகளை அமைத்துக் கொடுக்கும் பணிகளை செய்துவருவதாகவும். மொத்தமாக 10 ஆயிரம் படுக்கை வசதிகள் அமைத்துக் கொடுக்க தயாராக இருப்பதாகவும் பாலா தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments