12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து மத்திய அரசு இன்று ஆலோசனை
12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்துகிறது.
அனைத்து மாநில கல்வித்துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்களுடன் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று காணொலி வாயிலாக உயர்மட்ட ஆலோசனை நடத்துகிறார். இக்கூட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமை தாங்குகிறார்.
இக்கூட்டத்தில் நீட் மற்றும் ஜே.இ.இ போன்ற தொழில்முறைக் கல்விக்கான நுழைவுத் தேர்வுகள் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு கட்டாய அடிப்படை என்பதால் அந்த தேர்வை நடத்தியே ஆகவேண்டும் என்பதில் மத்திய கல்வித்துறை உறுதியாக இருந்து வருகிறது.
சில குறிப்பிட்ட பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்துவது குறித்தும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால் தற்போதைய கொரோனா சூழ்நிலையில் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கோரியுள்ளனர்
Comments