யமுனா நதியில் அதிகளவில் நுரை மிதந்து வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம்..
டெல்லி மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள யமுனா நதியில் அதிகளவில் நுரை மிதந்து வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
டெல்லி மக்களின் 60 சதவீத குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் யமுனா நதியில், அதே 60 சதவீத அளவுக்கு சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் ஆற்றில் திறந்து விடப்படுவதால் நதி மாசடைவது தெரியவந்துள்ளது.
குறிப்பாக தொழிற்சாலை மற்றும் மனித கழிவுகளால் 70 சதவீத நீர் மாசடைவதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ள நிலையில் யமுனா நதியில் மிதக்கும் நுரையால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், நுரையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள்அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments