அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.6 கோடி மோசடி? முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் உட்பட குடும்பத்தினர் 4 பேர் மீது புகார்

0 2934
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 6 கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அதிமுக அமைச்சர் நிலோபர் கபில் உட்பட உறவினர்கள் 4 பேர் மீது அவரது உதவியாளர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 6 கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அதிமுக அமைச்சர் நிலோபர் கபில் உட்பட உறவினர்கள் 4 பேர் மீது அவரது உதவியாளர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.

வாணியம்பாடியைச் சேர்ந்த பிரகாசம், முன்னாள் அமைச்சர் நிலோபர் கபிலிடம் உதவியாளராக பணியாற்றி வந்தார்.

தொழிலாளர் நலத்துறையிலும், வக்பு வாரியத்திலும் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி 108 பேரிடம் 6 கோடி ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு கொரோனாவை காரணம் காட்டி வேலையும் வாங்கித்தராமல், பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் நிலோபர் கபில் ஏமாற்றியதாக பிரகாசம் புகாரளித்துள்ளார்.

பணம் கொடுத்தவர்கள் தன் மீதும் புகாரளித்ததோடு, நேரடியாக பணம் கேட்டும் தொந்தரவு செய்து மிரட்டி வருவதால், தனக்கும், தனது குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு வழங்கவேண்டும் எனவும் பிரகாசம் புகார் மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments