ஒரு கிராமம், ஒரு தலைவர், ஒரு குடும்பம்..! பஞ்சத்தால் பிஞ்சுபோன சிட்டிசன் கிராமம்

0 9211
தமிழகத்தில் 35 ஆண்டுகளுக்கு முன்பு 80 குடும்பங்களுடன் ஜமீன் கிராமமாக செல்வச்செழிப்புடன் விளங்கிய கிராமம் ஒன்று , மழை பொய்த்து விவசாயத்தை கைவிட்டதால் உருக்குலைந்து, இருவர் மட்டுமே வசிக்கும் விசித்திர கிராமமாக உருமாறியுள்ளது.

தமிழகத்தில் 35 ஆண்டுகளுக்கு முன்பு 80 குடும்பங்களுடன் ஜமீன் கிராமமாக செல்வச்செழிப்புடன் விளங்கிய கிராமம் ஒன்று , மழை பொய்த்து விவசாயத்தை கைவிட்டதால் உருக்குலைந்து,  இருவர் மட்டுமே வசிக்கும் விசித்திர கிராமமாக உருமாறியுள்ளது.  கிராமப்புற மக்களுக்கு உள்ளூரில் வேலைப்வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி பகுதியில் உள்ள குச்சம்பட்டி தான் இருவர் மட்டுமே வசிக்கும் ஜமீன் கிராமம்..!

கோவிலில்லா ஊரின் குடியிருக்க வேண்டம் என்பார்கள் இங்கே கோவிலும் இருக்கின்றது, குடியிருக்க நல்ல வீடும் இருக்கின்றது வசிக்க தான் மக்கள் இல்லை..!

நகரத்தின் ஜன நெருக்கடியில் குடிசை அமைத்துக் கொண்டும் ஒட்டுக் குடித்தனத்திலும் இறுக்கிப்பிடித்து மக்கள் வசித்து வரும் நிலையில், இந்த கிராமத்திலோ காற்றோட்டமாக நல்ல இடைவெளி விட்டு கட்டப்பட்ட வீடுகள் அனைத்தும் பூட்டப்பட்டு கிடக்கின்றது. வசிப்பதற்கு ஆட்கள் இல்லை

இங்கு வசிப்பது ஒரே ஒரு குடும்பம், 77 வயது சித்தமருத்துவரான போஸ் 67 வயதான தனது மனைவிய ராஜியுடன் வசித்து வருகின்றார். இந்த கிராமத்துக்கு தலைவரும் நம்ம போஸ் தாத்தா தான்..!

கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பாகஅருகில் உள்ள 5 கிராமங்களுக்கு தாய்கிராமமகவும் ஜமீன் கிராமமாகவும் விளங்கியுள்ளது இந்த குச்சம்பாட்டி. விவசாய தொழில் சிறப்பாக நடைபெற்ற போது இங்குள்ள மக்கள் செல்வ செழிப்புடன் இருந்துள்ளனர். இந்த ஊரில் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்களுடன் 300 பேர் செழிப்பாக வாழ்ந்து வந்த நிலையில் கால நிலையில் ஏற்பட்ட மாற்றம் மழை பொய்த்து விவசாயத்தில் ஏற்பட்ட நட்டம் இந்த ஊர் மக்களை நிலைகுலைய செய்துள்ளது. பெரும் பஞ்சம் நிலவிய காரணத்தினால் இக்கிராம மக்கள் வேலை வாய்ப்பை தேடி சென்னை,மதுரை, கோவை என வெளி மாவட்டங்களுக்கு குடிப்பெயர்ந்து விட்டதாக கூறப்படுகின்றது. இதனால், தற்போது இக்கிராமத்தில் வீடுகள் பெரும்பாலும் இடிந்தும்,சிதலமடைந்தும் திகிலாகவும் காட்சியளிக்கின்றது.

இக்கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் நடத்தப்படும், பொங்கல் விழாவுக்கு மட்டும் ஊரை காலி செய்து சென்ற தங்கள் கிராம மக்கள் வந்து சாமிகும்பிட்டு விட்டு செல்வதாகவும் அவர்களை ஒருங்கிணைப்பதற்காக தான் தலைவராக இருப்பதாகவும் போஸ் தெரிவித்தார்.

சொந்த ஊரில் வசிக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் வசிப்பதாகவும், இக்கிராமத்தில் கேபிள், குடி நீர், என எந்த ஒரு அடிப்படை வசதிகள் ஏதும் கிடையாது என்றும் அன்றாடம் உணவுக்கு கூட மிகவும் கஷ்டப்படுவதாக வேதனையுடன் தெரிவிக்கும் ராஜி பாட்டி, சித்த வைத்தியம் தொழில் மூலமாக அக்கம் பக்கத்து கிராமத்தினர் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வருவதாகவும், தங்களுக்கு முதியோர் உதவித்தொகை கூட இன்னும் கிடைக்கவில்லை என கண்ணீர் மல்க கூறினார்.

குச்சம்பட்டி மட்டுமல்ல தமிழகத்தில் பெரும்பாலான கிராமங்கள் தங்கள் சுய அடையாளத்தை இழந்து நிற்கின்றது. எங்கெல்லாம் விவசாயம் அழிந்து மாற்று வேலைவாய்ப்பை தேடி மக்கள் நகரத்தொடங்கி இருக்கிறார்களோ அது அந்த கிராமங்கள் எளிதாக தங்கள் சுய அடையாளத்தை இழந்து விடுகின்றது .

எனவே அரசு கிராமப்புற மக்களுக்கு தேவையான வேலைவாய்ப்பை உறுதி செய்வதோடு, நகர் புற மக்களுக்கு இணையாக அனைத்து விதமான வசதிகளையும் அவர்களுக்கும் கிடைக்க செய்தால் மட்டுமே நமது கிராமங்கள் அழிவில் இருந்து தப்பிக்கும், விவசாய நிலங்களும் அழிக்கப்படுவதில் இருந்து காக்கப்படும்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments