கறுப்பு பூஞ்சை காற்றில் பரவினாலும் ஆரோக்கியமானவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை
கறுப்பு பூஞ்சை தொற்றை ஏற்படுத்தும் பூஞ்சையான மியூகோர் (Mucor) காற்று வழியாக பரவினாலும், ஆரோக்கியமாக உள்ள நபர்களுக்கு அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் என்டோகிரைனாலஜி துறை தலைவர் டாக்டர் நிகில் தாண்டன் தெரிவித்துள்ளார்.
மியூகோர் பூஞ்சையை எதிர்த்து அழிக்கும் திறன் நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திக்கு உண்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே கறுப்பு பூஞ்சை சிகிச்சை மருந்தான லிபோசோமல் ஆம்போடெரிசின்-பி (Liposomal Amphotericin-B) மருந்துக்கு ஏற்ப்பட்டுள்ள தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடியை கேட்டுக் கொண்டுள்ளார்.
கறுப்பு பூஞ்சை தொற்றை ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட காப்பீட்டுத் திட்டங்களில் சேர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
Comments