இந்தியாவில் ஸ்புட்னிக் தடுப்பு மருந்து உற்பத்தி ஆகஸ்டில் தொடங்கும் - ரஷ்யாவுக்கான இந்திய தூதர் தகவல்
இந்தியாவில் ஸ்புட்னிக் தடுப்பு மருந்து உற்பத்தி ஆகஸ்டு மாதத்தில் தொடங்கும் என ரஷ்யாவுக்கான இந்திய தூதர் பால வெங்கடேஷ் வர்மா தெரிவித்துள்ளார்.
இதுவரை ரஷ்யாவில் இருந்து 2 லட்சத்து 10 ஆயிரம் டோஸ் ஸ்புட்னிக் தடுப்பு மருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், மே இறுதிக்குள் 30 லட்சம் டோஸ் மருந்து மொத்தமாக அனுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதத்தில் 50 லட்சம் டோஸ் மருந்துகள் வழங்கப்படும் என்றும், ஆகஸ்டு முதல் இந்தியாவிலேயே உற்பத்தி தொடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆண்டுக்கு 85 கோடி டோஸ் அளவுக்கு இந்தியாவில் ஸ்புட்னிக் தடுப்பு மருந்து உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Comments