யாஸ் புயல் ஒடிசா கடலோரப் பகுதிகளைத் தாக்கும் என எச்சரிக்கை
யாஸ் புயல் ஒடிசா கடலோரப் பகுதிகளைத் தாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், 14 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
வடக்கு அந்தமான் கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுப்பெற்றுப் புயலாக உருவெடுத்து மே 26ஆம் நாள் ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வுத்துறை கணித்துள்ளது.
இதையடுத்து ஒடிசாவில் கடலோர மாவட்டங்களிலும், அதையொட்டிய உள் மாவட்டங்களிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு முடுக்கி விட்டுள்ளது. கடற்படை, கடலோரக் காவல்படை ஆகியவற்றைத் தயார் நிலையில் இருக்கும்படி மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
Comments