சொந்த ஊர் புறப்பட்ட வடமாநில தொழிலாளர்கள்... சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 30மணி நேரமாக காத்திருப்பு

0 13607

 ஊரடங்கால் வாழ்வாதாரம் முடங்கிய நூற்றுக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காத்திருக்கின்றனர்.

தமிழகத்தில்  அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கால் கட்டுமான நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக அவற்றில் வேலை பார்த்து வந்த வட மாநில தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் 250க்கும் மேற்பட்ட வட மாநில இளைஞர்கள் சொந்த ஊருக்கு செல்ல சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் சுமார் 30 மணி நேரமாக காத்திருப்பதாக கூறினர். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் முதலே ஏராளமானோர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தினமும் காத்திருப்பதால் அவர்களுக்கு  பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சார்பில் உணவும் குடிநீர் உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments