சென்னையில் வழிப்பறி வழக்கில் கைதான நபருக்கு தீவீரவாத அமைப்புகளுடன் தொடர்பு எனத் தகவல்

0 4189

சென்னையில் நடந்த வழிப்பறி வழக்கில் கைதான நபருக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5-ஆம் தேதி பெரியமேடு காவல் நிலையம் அருகே சுராஜ் என்ற நகை வியாபாரியிடம் 7.50 லட்சம் பணம், 282 கிராம் தங்க நகையை இரண்டு மர்ம நபர்கள் வழிப்பறி செய்தனர். இந்த வழக்கில்,  இரண்டு பேரில் ஒருவனான யாசின் என்பவனை போலீசார் பிடித்தனர். மற்றோரு நபரான ரபீக் என்பவனும் பிடிபட்ட நிலையில், அவன், இதற்கு முன்பு சிபிசிஐடி, என்ஐஏ போன்ற அமைப்புகளில் வழக்கு உள்ள பழைய குற்றவாளி என தெரியவந்துள்ளது. 

பாக் உளவு அமைப்பு மூலம் தமிழகத்தில் கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விடும் ஏஜெண்டாக செயல்பட்டதாகவும்  ரபீக் மீது வழக்கு உள்ளது. மேலும், அல் உம்மா பயங்கரவாத அமைப்போடு தொடர்புடைய நபர் எனவும்  என்.ஐ.ஏ அமைப்பால் தேடப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.  அவனை  என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments