ஆட்டோ ஓட்டுநர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை - சுகாதாரத்துறை செயலாளர்
தமிழகத்திலுள்ள தனியார் கொரோனா பரிசோதனை மையங்கள் தணிக்கை செய்யப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பரிசோதனை முடிவுகள் குறித்து தவறான தகவலை பதிவேற்றிய, 'மெட் ஆல்' ஆய்வகத்திடம் விளக்கம் கேட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ள நிலையில், அத்தியாவசிய பணியில் ஈடுபடும் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். திருப்பூர், ஈரோடு, திருவாரூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது எனவும், சென்னை, சேலம், நெல்லை, செங்கல்பட்டு, திண்டுக்கல் மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை குறைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
Comments