மூச்சுத் திணறல் ஏற்படும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க புதிய ரோபோ
மூச்சு விடுவதற்கு சிரமப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க புதிய ரோபோ இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
லூகாஸ் 3 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ மூச்சு விடுவதற்கு சிரமப்படும் நோயாளிகளின் முதுகுப்புறத்தில் வைக்கப்படும் பிளாஸ்டிக் தட்டில் பொருத்திய பின் இயக்கப்படுகிறது.
நோயாளியின் வயது, மூச்சு விடுவதற்கு எடுத்துக் கொள்ளும் ஆகியவற்றைக் கணக்கிட்டு ரோபோவில் இணைக்கப்பட்டுள்ள ரப்பர் பை போன்ற அமைப்பு தேவைக்கு ஏற்ப நோயாளியின் நெஞ்சில் அழுத்திக் கொண்டிருக்கும். இதனால் அவசர சிகிக்சைக்காக மருத்துவர் அல்லது செவிலியரின் உதவியின்றி சிபிஆர் எனப்படும் செய்முறையை இந்த ரோபோ செய்து வருகிறது.
அவசர காலங்களில் ஆம்புலன்ஸ்களில் வைக்கப்பட்டுள்ள இந்தக் கருவி வெற்றிகரமாக இயங்கியதைத் தொடர்ந்து இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
Comments