கொரோனா விவகாரத்தில், செயல்படுத்த முடியாத உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டாம்... உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
கொரோனா விவகாரத்தில், செயல்படுத்த முடியாத உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டாம் என்று உயர் நீதிமன்றங்களை, உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், அலகாபாத் உயர் நீதிமன்றம், கொரோனா விவகாரம் பற்றி, தானாக முன் வந்து நடத்திய விசாரணையை அடுத்து உத்தர பிரதேசத்தில் அனைத்து, மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளில், நான்கு மாதங்களில் ஆக்சிஜன் வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
ஒரு மாதத்துக்குள், அனைத்து கிராமங்களிலும், இரண்டு ஆம்புலன்ஸ்கள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, உத்தர பிரதேச அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த, நீதிபதிகள் அமர்வு, கொரோனா தொடர்பான விவகாரங்களை விசாரிக்கும் உயர் நீதிமன்றங்கள், செயல்படுத்த முடியாத உத்தரவுகளை பிறப்பிக்க கூடாது என்று தெரிவித்தனர்.
Comments