ஏர் இந்தியா நிறுவன வாடிக்கையாளர்களின் விபரங்கள் இணையத்தில் திருட்டு
ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் வாடிக்கையாளர் விபரங்கள் இணையத்தில் திருடப்பட்டுள்ளதால் 45 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2011 ஆகஸ்ட் மாதம் முதல் நடப்பாண்டு பிப்ரவரி வரை ஏர் இந்தியா விமானத்தில் அடிக்கடி பயணம் செய்பவர்களின் பெயர், பிறந்த தேதி, அவர்களின் தொடர்பு எண், கிரடிட் கார்டு விபரங்கள் மற்றும் பாஸ்வேர்டுகள் போன்றவை ஹேக் செய்யப்பட்டுள்ளன.
இந்த விபரங்கள் ஏர் இந்தியா விமான நிறுவனம் மட்டுமின்றி மலேசியா ஏர்லைன்ஸ், ஃபின் ஏர், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், லூஃப்தன்ஸா மற்றும் கேத்தே பசிபிக் போன்ற விமான நிறுவன வாடிக்கையாளர்களின் விபரங்களும் திருடப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் கிரடிட் கார்டுகள் பாஸ்வேர்டை அடிக்கடி மாற்றுமாறு ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments