வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகும்: வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், வடக்கு அந்தமான் மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது அடுத்தடுத்து வலுவடைந்து வருகிற 24ஆம் தேதி புயலாக மாறி, மே 26ஆம் தேதி மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு யாஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Comments