கொரோனா பரவலைத் தடுக்க மாநிலங்கள் கையாண்ட சிறந்த முறைகளை பட்டியலிட்டது மத்திய அரசு..! தமிழகத்தின் டேக்சி ஆம்புலன்ஸ் சேவையும் இடம் பெற்றது
நாட்டின் பல மாநிலங்களிலும் கொரோனா பரவலைத் தடுக்கக் கையாளப்படும் சிறந்த நடைமுறைகளை மத்திய நலவாழ்வு அமைச்சகம் பட்டியலிட்டுள்ளது.
அதில் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் டேக்சி ஆம்புலன்ஸ் சேவையும் இடம் பெற்றுள்ளது. ராஜஸ்தானில் ஊரகப் பகுதிகளுக்கு கொரோனா அல்லாத மருத்துவ சேவைகள் வழங்க ஒரு வட்டாரத்துக்கு ஒரு நடமாடும் மருத்துவ ஊர்தி வசதி செய்ததும் இடம் பெற்றுள்ளது.
கேரளத்தில் ஆக்சிஜனை முறையாகப் பயன்படுத்தச் செவிலியர் ஒருவரை நியமித்த நடைமுறை, மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதை உறுதி செய்ய ராஜஸ்தானில் கையாண்ட ஆக்சிஜன் மித்ரா, உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலியில் வீடுவீடாகச் சென்று கொரோனா சோதனைக்கு மாதிரிகள் பெற்றது ஆகியனவும் இவற்றில் அடங்கும்.
Comments