நாரதா வழக்கு - 2 அமைச்சர்கள் உள்பட 4 பேருக்கு வீட்டுக்காவல் :கொல்கத்தா உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

0 2120

நாரதா வழக்கில் சிபிஐயால் கைது செய்யப்பட்ட அமைச்சர்கள் உள்ளிட்ட திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து நால்வரையும் வீட்டுச் சிறையில் வைக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வந்த நிலையில் வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும், மம்தா அரசின் இரண்டு அமைச்சர்களான ஃபிர்ஹாத் ஹக்கீம், சுப்ரதா முகர்ஜி மற்றும் மதன் மித்ரா, சோவன் சாட்டர்ஜி ஆகியோரை திங்கட்கிழமை சிபிஐ கைது செய்தது.

இந்நிலையில் நால்வரும் இடைக்கால ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்த நிலையில், வீட்டுச் சிறையில் வைக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் பிறப்பித்திருக்கிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments