ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 22.05.2018ல் நடைபெற்ற வன்முறைக்கு முன்பு பதியப்பட்ட வழக்குகள் வாபஸ் - முதலமைச்சர்
ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
துப்பாக்கிச்சூடு குறித்து விசாரித்து வரும் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று சிபிஐ வசம் உள்ள மற்றும் பொது மற்றும் தனியார் சொத்துகளை சேதப்படுத்திய வழக்குகள் தவிர்த்து, ஏனைய வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படுவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
2018 மே 22-ம் தேதி நடந்த துப்பாக்கிச்சூடு கலவரத்திற்கு முன்பு பதிவு செய்யப்பட்டதில் சில வழக்குகள் தவிர்த்து எஞ்சிய வழக்குகளும் திரும்பப் பெறப்படுகிறது.
போராட்டத்தின் போது போலீசாரால் கைது செய்யப்பட்ட 93 பேருக்கு தலா 1லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். இதுதவிர வேறொரு வழக்கில் கைதாகி சிறையிலேயே உயிரிழந்த நபரின் தாயாருக்கு 2லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். மேலும் கைது செய்யப்பட்டவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக தடையில்லா சான்றிதழ்கள் வழங்கப்படும்.
Comments