தமிழகத்துக்கு ஒரு கோடி டோஸ் தடுப்பூசியை உடனடியாக ஒதுக்க மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனை டி.ஆர்.பாலு நேரில் சந்தித்து கோரிக்கை
தமிழகத்துக்கு குறைந்தபட்சம் ஒரு கோடி டோஸ் கொரோனா தடுப்பூசியை உடனடியாக வழக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனை திமுக எம்.பி.டி.ஆர்.பாலு நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வழங்கிய கடிதத்தில், 18 முதல் 44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்திற்காக வெறும் 13லட்சத்து85லட்சம் டோஸ் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசுக்கு சொந்தமாக செங்கல்பட்டில் உள்ள எச்.எல்.எல். ஆலையில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியை தொடங்க கூடுதலாக 300 கோடி ரூபாய் முதலீடு செய்யவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தொடர்ந்து, ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று மாயமான நாகை மீனவர்கள் 9 பேரை மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்கவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து டி.ஆர். பாலு கடிதம் வழங்கினார்.
Comments