இந்தியாவில் மருந்து தயாரிப்புக்கான அடக்கச் செலவு அதிகரிப்பு; தேவையை விட வழங்கல் குறைவாக உள்ளதால் மருந்துகளுக்குப் பற்றாக்குறை
இந்தியாவில் மருந்து தயாரிப்புக்கான செலவு அதிகரித்துள்ள நிலையில் முதன்மையான மருந்துகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா இரண்டாவது அலை கடுமையாகப் பாதித்துள்ள நிலையில் வைரஸ் எதிர்ப்பு மருந்துகள், புண்களை ஆற்றும் மருந்துகள், பூஞ்சைக் கொல்லி, விட்டமின்கள், பாராசிட்டமால் ஆகியவற்றின் தேவை அதிகரித்துள்ளது. தேவையை விட வழங்கல் குறைவாக உள்ளதால் முதன்மையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது.
மருந்துக்கான உட்பொருள் விலை, போக்குவரத்துச் செலவு ஆகியன பெருமளவு அதிகரித்துள்ள சூழலில் இந்தத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு விட்டமின் சி, துத்தநாகச் சத்து மாத்திரைகள் வழங்கப்படுவதால் அவற்றுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிறு நகரங்களிலும் ஊரகப்பகுதிகளிலும் தட்டுப்பாடு அதிகமுள்ளது.
Comments