உத்தரபிரதேசத்தில் இருந்து எடுக்கப்பட்ட இமயமலையின் புகைப்படம்..! ஊரடங்கால் காற்றுமாசு குறைந்ததால் தெளிவாக தெரியும் இமயமலை

0 3321
உத்தரபிரதேசத்தில் இருந்து எடுக்கப்பட்ட இமயமலையின் புகைப்படம்..! ஊரடங்கால் காற்றுமாசு குறைந்ததால் தெளிவாக தெரியும் இமயமலை

த்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தங்களது வீட்டின் மொட்டை மாடியிலிருந்து பல நூறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இமயமலையை புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிட்டுவருகின்றனர்.

சஹரன்பூர் (Saharanpur) நகரத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் இமயமலை மிகத்தெளிவாகவே தெரிகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தப்பட்ட ஊரடங்கால் காற்றுமாசு குறைந்ததே பல நூறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இமயமலை தெளிவாக தெரிவதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

அதுமட்டுமின்றி, கடந்த இரண்டு நாட்களாக அங்கு பெய்த மழையால் மேகங்கள் விலக்கப்பட்டு சிகரங்கள் தெளிவாக தெரிந்தது. கடந்த ஆண்டு ஊரடங்கின்போதும், மாசு குறைந்து இதேபோன்று இமயமலை தெரிந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments