தடுப்பூசி பற்றாக்குறையை போக்க ஆண்டுக்கு 90 கோடி டோஸ் தடுப்பூசி தயாரிக்க திட்டம் - பாரத் பயோடெக்
கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையை போக்க ஆண்டுக்கு 90 கோடி டோஸ் கோவேக்சின் தடுப்பூசி மருந்துகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 2 கோடி தடுப்பூசி டோஸ்களை உற்பத்தி செய்துள்ளதாகவும், மே மாதம் 3 கோடி முதல் மூன்றரை கோடி வரை தடுப்பூசி மருந்து உற்பத்திக்கு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், இணை நிறுவனமான சிரோன் பெஹ்ரிங் நிறுவனம் மூலம் குஜராத்தில் உள்ள ரேபிஸ் தடுப்பூசி நிலையத்தில் கோவேக்சின் தடுப்பூசியை உற்பத்தி செய்ய முடிவெடுத்துள்ளதாகவும், இதன் மூலம் அக்டோபர் முதல் மாதந்தோறும் ஒரு கோடியே 70 லட்சம் கொரோனா தடுப்பூசி வரை உற்பத்தி செய்யமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments