அரசு தலைமை மருத்துவமனையில் நிரம்பிய கொரோனா படுக்கைகள்... தயாராகும் புதிய கட்டிடத்துடன் கூடிய படுக்கை வசதிகள்

0 2032

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக பெரும்பாலான மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் நிரம்பியுள்ள நிலையில், புதிதாக படுக்கைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக காஞ்சிபுரம்  அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள 270 ஆக்சிஜன் படுக்கைகள் மற்றும் 100 சாதாரண படுக்கைகள் என அனைத்து படுக்கைகளும் நிரம்பின. இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் 15 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம் நாளை முதல் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டிடத்தில் 250 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் உள்ளதால், கூடுதலாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். 

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் வேகமாக நிரம்பி வரும் நிலையில், அங்குள்ள  அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ராமேஸ்வரம் ராம் நிவாஸ் வளாகங்களில் கூடுதலாக படுக்கைகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் அரசு மருத்துமனையில் செயல்பட்டு வரும் கொரோனா  சிகிச்சை மையத்தில் மொத்தமாக 350 ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகள் உள்ள நிலையில் அவற்றில் 298 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 

ஈரோடு மாவட்டத்தில் நாளுக்கு அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக அரசு மருத்துவமனைகளில் உள்ள ஆக்சிஜன் படுக்கைகள் அனைத்தும் நிரம்பின. பெருந்துறை அரசு மருத்துவமனையில் உள்ள 380 ஆக்சிஜன் படுக்கைகளும் நிரம்பியுள்ள நிலையில், ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்ள 100 ஆக்சிஜன் படுக்கைகளும் நிரம்பின. இந்நிலையில் பெருந்துறை அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள இடத்தில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோன சிகிச்சை மையம் அமைப்பதற்கான  கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கோவை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகள் அனைத்தும் நிரம்பி உள்ளதால், அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகள் அமைப்பதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. கோவை அரசு மருத்துவமனையில்  717 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் உள்ள நிலையில் அனைத்தும் நிரம்பின. இதன் காரணமாக அருகில் உள்ள அரசு கலை கல்லூரியில் 138 ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டு வருகிறது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளம் பெருக்கு எற்பட்டுள்ளது. மலையோர பகுதிகளில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதையொட்டி திற்பரப்பு அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆர்ப்பரிக்கும் தண்ணீர் தடுப்பு வேலியை தாண்டி செல்வதால் சிறுவர் பூங்கா மூழ்கியுள்ளது. முழு ஊரடங்கு காரணமாக அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பபட்டுள்ளது குறிப்பிடத்தகக்கது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments