கடலூரில் வெண்டிலேட்டர் மிஷின், ஆக்சிஜனை அகற்றியதால் நோயாளி உயிரிழப்பு? புகார் குறித்து நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

0 5027
கடலூரில் வெண்டிலேட்டர் மிஷின், ஆக்சிஜனை அகற்றியதால் நோயாளி உயிரிழப்பு? புகார் குறித்து நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

டலூர் அரசு மருத்துவமனையில் தனது கணவருக்கு பொருத்தப்பட்டிருந்த வெண்டிலேட்டர் மிஷின் மற்றும் ஆக்சிஜனை மருத்துவர் எடுத்துச் சென்றதால், அவர் உயிரிழந்துவிட்டதாக கூறி மனைவி கதறி அழுத சம்பவம் குறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த திட்டக்குடியைச் சேர்ந்த ராஜாவுக்கு பொருத்தப்பட்டிருந்த வெண்டிலேட்டர் மிஷின் மற்றும் ஆக்சிஜனை, உணவு அருந்தும் போது கழட்டி வைத்த நிலையில், அங்கு வந்த மருத்துவர் மற்றும் செவிலியர் அதனை எடுத்துச் சென்றதாகவும், இதனால் நோயாளி ராஜா துடிதுடித்து உயிரிழந்துவிட்டதாக கூறி அவரது மனைவி கதறி அழும் வீடியோ பதபதைக்க வைக்கும் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இவ்வளவு பெரிய கொடூரமான சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ள அவர் தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், இறந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments