ஆசியாவின் 2வது பணக்காரரானார் கெளதம் அதானி..!

0 4739

தானி குழுமத்தின் நிறுவனத் தலைவர் கௌதம் அதானி ஆசியாவின் 2வது பெரும் பணக்காரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராகியுள்ளார்.

ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலை ப்ளும்பெர்க் வெளியிட்டுள்ளது. இதில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை மற்றும் நிலக்கரி சுரங்கத்துறை உள்ளிட்ட துறைகளில் கோலாச்சி வரும் அதானி, 66.5 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் சீனாவின் பெரும் பணக்காரரான ஜாங் ஷான்ஷனை (Zhong Shanshan) பின்னுக்குத்தள்ளி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

76.5 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார். உலக அளவிலான பணக்காரர் பட்டியலில் அம்பானி 13 ஆவது இடத்திலும் அதானி 14 ஆவது இடத்திலும் உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments