வங்கக் கடலில் வரும் 24ந் தேதி புதிய புயல் உருவாகிறது: வானிலை ஆய்வு மையம் தகவல்
தென்மேற்கு பருவமழை அந்தமான் மற்றும் அதனையொட்டியுள்ள தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக கூறினார்.
இது வரும் 24ம் தேதி புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெற்று வரும் 26-ம் தேதி ஒடிசா மற்றும் மேற்கு வங்க பகுதிகளில் கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக கூறினார்.
Comments