தனிநபர் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய செப்டம்பர் 30ந் தேதி வரை கால அவகாசம்!

0 1595

கடந்த 2020 - 21ம் நிதியாண்டிற்கான தனிநபர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், செப்டம்பர் 30 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வருமானத்திற்கான தணிக்கை தேவைப்படாத தனி நபர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர், 'ஐ.டி.ஆர் - 1 அல்லது ஐ.டி.ஆர் - 4' படிவங்களில், ஆண்டுதோறும், ஜூலை 31க்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.கொரோனா சூழல் காரணமாக, தனி நபர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், நீட்டிக்கப்பட்டுள்ளதாக, மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

அதுபோல, வருமானத்திற்கு தணிக்கை தேவைப்படும் தனி நபர்கள், நிறுவனங்கள் ஆகியவை வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள், அவற்றின் ஊழியர்களுக்கு வருமான வரிப் பிடித்தம் தொடர்பான, 'படிவம் 16' படிவத்தை, ஜூலை, 15க்குள் வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி கணக்கை காலதாமதமாக தாக்கல் செய்வதற்கான அவகாசம் அடுத்தாண்டு ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments